மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள வலையிறவு மடத்துபிள்ளையார் ஆலய உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
ஆலயத்தின் முன்னால் உள்ள உண்டியலை திருடர்கள் இரும்பு கம்பியால் தாக்கி உடைத்து அதிலிருந்த 25,000 ரூபாவுக்கு மேலதிகமான பணத்தை திருடிச் சென்றுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருட்டு தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.