ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயத்தின்போது ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு பிற்போடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று புதன்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது வழக்கு எதிர்வரும் மே மாதம் 15 திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 8 ஆம் திகதி செங்கலடி-கொம்மாதுறையில் மயிலத்தமடு பண்ணையாளர்கள் மேற்கொண்ட கவன ஈர்ப்பு போராட்டத்தின்போது, அதில் கலந்து கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்க தலைவர் மற்றும் பொது அமைப்புகளை சேர்ந்த 37 பேருக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே வழக்கின் தீர்ப்பு நீதவானால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.