மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் சிவமுத்து மாரியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உட்சவத்தை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை இரவு டச்பார் வங்களாவடி பிள்ளையார் ஆலயத்திலிருந்து பக்த அடியார்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு காவடி, பால்காவடி மற்றும் அலகு குத்தி ஊர்வலமாக நள்ளிரவு 1 மணியளவில் வந்தடைந்தனர்.
அதன் பின்னர் அதிகாலை 5 மணியளவில் தீ மிதிப்பு இடம்பெற்றது. இதில் பெண்கள், சிறுவர்கள் முதல் அனைவரும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிக்கொண்டனர். தொடர்ந்து சாட்டையடி வழங்கப்பட்டு குறித்த தீ மிதிப்பு நிறைவடைந்தது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்




























