மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
கொக்கட்ச்சோலை முனைக்காடு களப்பு பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் குறித்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது 25 பரல்களில் கோடா மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினலுக்கு கிடைத்த தகவலின்படி பொலிஸ் பொறுப்பதிகாரி டிலான் கலவேவ தலைமையிலான குழுவினர் குறித்த முற்றுகை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இதேவேளை கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் தப்பியோடியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்