களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் இன்று செவ்வாய் கிழமை முச்சக்கரவண்டி ஒன்றும் டி.எஸ்.ஐ ரயர் நிறுவனத்தின் லொறியும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
மட்டு கல்முனை பிரதான வீதி வழியே களுவாஞ்சிகுடி பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் மட்டக்களப்பு பகுதியிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டி.எஸ்.ஐ ரயர் கம்பனிக்கு சொந்தமான லொறியும் குருக்கள்மடம் செல்லக்கதிர்காம முருகன் ஆலயத்திற்கு அருகாமையிலுள்ள வளைவில் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன் மேலும் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


