மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட குற்றவிசாரணை பிரிவு மற்றும் சிறப்பு போதைப்பொருள் தடுப்பு பொறுப்பாதிகாரிகள் முன்னெடுத்த சோதனையின் போது 9 கிலோ 540 கிராம் அளவுடைய கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் இன்று செவ்வாய் கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்கறைப்பற்று பகுதியை சேர்ந்த 33 மற்றும் 42 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.