மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் பாவனைக்கு உதவாத மீனை உட்கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள மாங்காடு பிரதேசத்தை சேர்ந்த நால்வர் பாவனைக்கு உதவாத மீனை உட்கொண்டதில் உடல்நிலை பாதிக்கப்பட்டு களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரில் 26 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.



மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
