மட்டக்களப்பு கல்லடியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலைக்கு முன்பாக உள்ள நாற்சந்தியில் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி நோக்கி பயணித்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டியுடன் மோதியதால் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
