கரடியனாறு மரப்பாலம் புத்தம்புரி குளத்தில் மீன்பிடிக்க சென்ற மீனவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யானை தாக்குதலுக்கு இலக்காகி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மயிலவெட்டுவானை சேர்ந்த இராசமன்னன் தேவராசா (வயது – 42) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று சனிக்கிழமை இரவு குளத்தில் மீன்பிடிக்க சென்று வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள் அவரை தேடிச் சென்றுள்ளனர். அப்போது குளத்துக்கு அருகாமையில் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில், அவர் சடலமாக கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சடலத்தின் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.