ஏறாவூர் நகரசபையில் இந்த வருடம் வீடு நிர்மாணத்திற்காக விண்ணப்பித்து அனுமதி பெறப்பட்ட நபர்களுக்கு தென்னை பயிர் செய்கை சபையால் நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் தொனிப் பொருளில் ஏறாவூர் நகரசபை மண்டபத்தில் வீட்டுத் தோட்ட திட்டத்தின் கீழ் நபர் ஒருவருக்கு இரண்டு தென்னை நாற்று வீதம் வழங்கப்பட்டது.
ஏறாவூர் நகரசபையின் செயலாளர் எம்.எச்.எம் ஹமீம் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது தென்னை பயிர்ச் செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் திருமதி பி. ரவிராஜ், ஏறாவூர் நகரசபையின் நிதி உதவியாளர் திருமதி நிஸா லாபிர், வருமான பரிசோதகர் என். வாஹித், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.சி.எம் சப்றாஸ், எம். முஸம்மில், திருமதி செல்வி, சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் சி. நிதர்சினி, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி றுஷைதா ரசாக் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
குறித்த திட்டத்தின் ஊடாக ஏறாவூர் நகரசபை பிரிவின் கீழ் 73 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு தென்னை நாற்றுக்கள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.



