மட்டு.ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச சபையின் புதிய உறுப்பினர் பதவிப்பிரமாணம்

-வாழைச்சேனை நிருபர்-

மட்டக்களப்பு ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச சபையின் புதிய உறுப்பினராக சித்தாண்டி மேற்கு 8ம் வட்டார பட்டியல் வேட்பாளராக தெரிவு செய்யபட்ட சித்தாண்டி வண்ணக்கர் வீதி 2ல் உள்ள சிவானந்தன் வவானந்தன் என்பவர் பிரதேசசபை உறுப்பினர் பதவிப்பிரமாணம் பெற்று உறுப்பினரானார்.

இலங்கைத் தமிழரசு கட்சியின் சித்தாண்டி மேற்கு வட்டாரக்குழு உறுப்பினராக தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றார்.

அத்துடன் சிறுதேன்கல் விவசாயக்கண்டத் தலைவர், கிரான் கமநல திணைக்கள நிலையத்தின் அபிவிருத்தி அமைப்பின் உறுப்பினர் போன்ற பல்வேறுபட்ட சமூகம்சார் அமைப்புக்களிலும் அங்கத்தவராக பணியாற்றுவதுடன் சிறந்த சமூகம்சார் போராட்டங்கள், உதவிக்கரம் வழங்குகின்ற செயற்பாடுகளும் தனது வாழ்நாளிலிருந்து தொடர்ச்சியாக தனது பங்குபற்றுகின்ற ஒரு உறுப்பினராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2017ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் சித்தாண்டி-1, சித்தாண்டி-2 ஆகிய சித்தாண்டி மேற்கு 8ம் வட்டராத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட முத்துப்பிள்ளை முரளிதரன் 726க்கு மேற்பட்ட வாக்குளைப்பெற்று ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேசசபைக்கு தெரிவாகிய உள்ளுராட்சி மன்ற 40 இலட்ச நிதியூடாக வீதிகள் மற்றும் வீதி மின் விளக்குகள் என்பன தனது வட்டாரத்துக்கு செய்து கொடுக்கப்பட்டது.

தனது பதவிக்காலத்தில் நல்லாட்சி காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதிப்பங்களிப்புடன் சுமார் 3 ½ கோடி ரூபாய் பெறுதியான அபிவிருத்தியை தனது கிராமம் சார்ந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருந்ததுடன், கம்பரெலிய மற்றும் தேசிய ஒருமைப்பட்டு அமைச்சு, உலக வங்கி நிதி திட்ட பங்களிப்பு ஊடாக பல இலட்சம் பெறுமதியான மிகவும் பிரதான தேவைப்பாடாக அமைந்துள்ள சித்தாண்டி பிரதான பாதையை ஊடறுத்து உப்பாறுவரை செல்லும் வடிகாண் திட்டம் என்பன ஒரு பிரதேசசபையின் உறுப்பினராக இருந்துகொண்டு தனது பதவிக்காலத்தில் நிறைவேற்றியுள்ளார்.

தான் பதிவியேற்று 4 வடமும் 3 மாதங்கள் கடந்த நிலையில் தனது தேர்தலுல் வெற்றிக்காக பலவழிகளிலும் உழைத்த பட்டியல் வேட்பாளரின் எதிர்கால அரசியல் பிரவேசத்திற்கு ஒரு சந்தர்ப்பமாக அமைவற்காக தனது உறுப்பினர் பதவியை வழங்கியுள்ளார்.

ஏறாவூர்ப் பற்று செங்கலடி பிரதேச சபையின் புதிய உறுப்பினராக பதவியேற்ற மறுநாள் தனது 8ம் வட்டார தொகுதியான சித்தாண்டி 1 பகுதியில் நீண்டகாலமாக கிறவல் இடப்படாமல் இருந்த வீதிக்கு பொதுமக்களுடன் இணைந்து குறித்த வீதிக்கு கிறவல் இட்டு செப்பனிடும் பணியை ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் முத்துப்பிள்ளை முரளிதரன்,

நான் இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர், எனது இனத்துக்கும் பிரதேசத்திற்கும் இந்த சபையில் ஒரு உறுப்பினராக வந்து மக்களின் அடிப்படையைத் தேவைகளை முடிந்தளவேனும் பூர்த்தி செய்துகொடுக்கவேண்டும் என்பதலில் ஆர்வமாக இருந்த நிலையில் 2017ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசியத்தின்பால் அக்கறையுடைய எனது 8ம் வட்டார மக்கள் என்னை அதிக வாக்குளை அளித்து ஆதரித்தார்கள், அதன்பால் சபை நிதி மற்றும் எனது மக்களின் தேவைக்காக எவ்வாறு நிதியை கொண்டுவரமுடிமோ அவ்வாறு பல பலகோடி நிதிகளை கொண்டுவந்து எனது ஆட்சிக்காலத்தில் மனப்பூர்வமான சேவையைச் செய்திருக்கின்றேன், அதனை எனக்கு வாக்களித்த மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளமை மனத்திருப்திளிக்கின்றது.

தேர்தல் காலத்தில் எனது வெற்றிக்கு பக்கபலமாக உழைத்த பட்டியல் வேட்பாளராக முன்னின்று உழைத்த சிவானந்தன் வவானந்தன் சிறப்பானதொரு சமூகப்பற்றாளன் மட்டுமல்லாது தனது தமிழ் தேசியத்தை நேசக்கும் நபர், அதனால் எனது பதவிக்காலம் தொடங்கி 2 ½ வருடம் கடந்த நிலையில் அவருக்கு எஞ்சிய வருடங்களை கொடுப்பதற்கு முயற்சி செய்தவேளை தமிழரசு கட்சியின் வேண்டுகோளுக்கு ஏற்ப 4 வருடமும் 3 மாதமும் கடந்த நிலையில் அவருக்கான சந்தர்ப்பத்தை வழங்க சந்தர்ப்பம் கிடைத்தமை மன மகிழ்ச்சியளிக்கின்றது.

உள்ளுராட்சி மன்ற எஞ்சிய காலத்தில் கௌரவ உறுப்பினர் சிவானந்தன் வவானந்தன் தனக்கு இயலுமான பணியை தனது 8ம் வட்டார மக்களுக்குரிய தேவைகளை அறிந்து மேற்கொள்வார் என்பதில் எவ்விதமாற்றுக் கருத்துமில்லை, என தெரிவித்தார்.

குறித்த ஏறாவூர்ப் பற்று செங்கலடி பிரதேச சபையானது தமிழ் தேசிய சுட்டமைப்பின் ஆட்சியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.