மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் இலங்கை வங்கிக்கிளை ஒன்றில் பணத்தை திருடர்கள் கொள்ளையிட முயற்சித்துள்ளனர்.
இரும்பு உபகரணங்கள், அலவாங்குகள் கொண்டு இன்று வியாழக்கிழமை அதிகாலை வங்கியின் கதவை திருடர்கள் உடைத்தபோதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த அபாய எச்சரிக்கை ஒலிச் சத்தம் காரணமாக அருகிலிருந்த மக்கள் திரண்டதால் திருடர்கள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரினால் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.