மட்டக்களப்பு வெபர் மைதானத்தின் தற்போதைய நிலை குறித்து மட்டக்களப்பு மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
வருட இறுதியில் இசைநிகழ்ச்சி ஒன்று மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தென்னிந்திய பாடகர்கள் கலந்து கொள்ளவிருக்கும் குறித்த இசை நிகழ்ச்சி நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் இசைநிகழ்ச்சிக்கான முன்னாயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் வெபர் மைதானம் மிகவும் மோசமாக காட்சியளிக்கிறது.
மைதானத்தில் உள்ள புற்களை வெட்டப்பட்டு மைதானத்திற்குள் கனரக வாகனங்களை செலுத்தி மைதானம் மிகவும் அலங்கோலமாக நிலையில் காட்சியளிக்கிறது.
இதனால் மட்டக்களப்பு மக்கள் இதை வன்மையாக கண்டித்துள்ளதோடு இது குறித்து தமது கடுமையான விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதேவேளை குறித்த இசை நிகழ்ச்சியை தாம் புறக்கணிப்பதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து எமது செய்தி சேவை மட்டக்களப்பு மாநகர சபையை தொடர்பு கொண்டு கேட்ட போது.
மட்டக்களப்பில் உள்ள சிலர் தான் இந்த இசை நிகழ்ச்சியை நடாத்துகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் மைதானத்தை வழங்கியுள்ளோம் மைதானத்தில் நடப்பவற்றிற்கு அவர்கள் பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்தனர்
மட்டக்களப்பின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழும் வெபர் மைதானம் இவ்வாறு அலங்கோலமாக காட்சியளிப்பது மட்டக்களப்பு மக்கள் மத்தியில் விசனத்தை உண்டாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


