மட்டக்களப்பு வலையிறவு – திமிலதீவு வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஆசிரியை மீது லொறி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வலையிறவு பாடசாலை ஒன்றைச் சேர்ந்த ஆசிரியையான மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த கமலநாதன் மதிவதனி (வயது – 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
விபத்தில் சிக்குண்ட ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததைத் தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார்.
விபத்தையடுத்து அப்பகுதியில் பெருமளவிலான மக்கள் ஒன்று திரண்டதால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது இதையடுத்து ,சம்பவ இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு பொலிஸார் நிலமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.










