இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி புதிய நிர்வாகத் தெரிவு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது கட்சியின் கொள்கையின் அடிப்படையில் ஜனநாயக ரீதியிலான வாக்கெடுப்பின் மூலம் தலைவராக திருமதி ரஞ்சினி கனகராசா, செயலாளராக திருமதி ரஜனி ஜெயப்பிரகாஷ், பொருளாளராக திருமதி கந்தையா கலைவானி, உபதலைவராக திருமதி கௌரி தயாளகுமார், உப செயலாளராக திருமதி தேவமணி ஆகியோருடன் நிர்வாக உறுப்பினர்கள் சகல பிரதேச பிரிவு ரீதியாகவும் மற்றும் ஆலோசகராக திருமதி பிரபா செல்வராசா ( முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் பொன். செல்வராசா அவர்களின் மனைவி) தெரிவுசெய்யப்பட்டனர்.


