-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கும் 22 ஆவது ஆசிய மாஸ்டர்ஸ் மெய்வல்லுனர் விளையாட்டு விழாவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் விளையாட்டு பயிற்றுநராக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடைமையாற்றும் ப.ஜெயக்குமார் 56 – 59 வயது பிரிவில் கோலூன்றி பாய்தல் (Pole Vault) போட்டியில் பங்கு பற்றி 2.30 மீட்டர் உயரத்தை தாண்டி மூன்றாம் இடத்தை பெற்று வெண்கல பதக்கத்தை வெற்றி கொண்டுள்ளார்.
இவர் இவ்விளையாட்டு விழாவில் 100 மீட்டர் ஓட்டம் மற்றும் நீளம் பாய்தல் போட்டிகளிலும் பங்குபற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவர் தனது இளமைக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகச் சிறந்த ஒரு தடகள சம்பியனாக பிரகாசித்தவராகும்.