மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட சில குடியிருப்பு பகுதிகளில் வீதிகளில் குப்பைகள் வெளியே குவிந்து கிடக்கின்றன.
மாநகரசபை வாகனங்கள் வாரத்தில் ஒரு முறை குறித்த குப்பைகளை அகற்றி வருகின்ற போதும், குறித்த நாட்களுக்கு முன்னரே மக்கள் வீதியோரங்களில் இவ்வாறு குப்பைகளை குவித்து வைத்திருப்பது இப்பகுதியில் சுகாதார பிரச்சினைகளை உருவாக்கும் அபாயம் ஏற்படுள்ளது.
எனவே, மாநகர சபை குறித்த விடயத்தை கருத்திற்கொண்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு எமது செய்திச்சேவை ஊடாக மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.