மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் இன்று செவ்வாய் கிழமை காலை 8 மணி முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சுகாதார ஊழியர்களின் இந்த பணிபகிஷ்கரிப்பினால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதை அவதானிக்க முடிந்தது.
மாதாந்த சிகிச்சையகத்திற்கு தூர பிரதேசங்களில் இருந்து இன்று வருகை தந்த நோயாளிகள் மீண்டும் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த நோயாளிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.