கிறிஸ்து பிறப்பை சிறப்பிக்கும் முகமாக நேற்று முன்தினம் புதன் கிழமை காலை 10.00 மணியளவில் மட்/ புனித சிசிலியா தேசிய மகளிர் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி நித்தாஞ்சலி தலைமையில் ஒளி விழா நடைபெற்றது.
நிகழ்வில் அதிதியாக கல்முனை இருதயநாதர் ஆலய பங்குத்தந்தை, அருட்தந்தை ஏ.தேவதாசன் மற்றும் வடக்கு கிழக்கு மெதடிஸ்த திருச்சபையின் தலைமை போதகர் கே. ஆர் அருள்ராஜா என்போர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வானது மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமாகி கலை நிகழ்வுகள் அதனைத் தொடர்ந்து இயேசு இறையாட்சியையும் வெளிப்படுத்தும் கரோல் இன்னிசை கீதங்களும், நடனம், கதை, போன்ற கலை நிகழ்வுகளும் மாணவிகளால் சிறப்பாக இடம் பெற்றன.



