மட்டக்களப்பு – தன்னாமுனை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கார் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
செங்கலடியில் இருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி வந்த காரே வேக்கட்டுப்பாட்டினை இழந்து தன்னாமுனை ஆற்றுப்பகுதியில் விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த வாகன உரிமையாளர் மட்டக்களப்பு கல்லடித்தெருவை சேர்ந்தவர் என்பதுடன் விபத்தில் குறித்த நபருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.