நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
கடந்த மாவீரர்தின நிகழ்வுகளின் போது கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக இவ்விஜயத்தை மேற்கொண்டதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரின் மகனான தனுஜன் என்பவரும் கடந்த மாவீரர்தின நிகழ்வுகளில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தார்.
