மட்டக்களப்பு – கொழும்புக்கு இடையிலான ரயில் சேவைகள் இன்று வியாழக்கிழமை இரவு வழமை போன்று நடைபெறும் என மட்டக்களப்பு புகையிரத நிலைய அதிபர் அ.பேரின்பராஜா எமது செய்திசேவைக்கு தெரிவித்துள்ளார்.
கல்ஓயா பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை மீனகயா கடுகதி ரயிலில் யானைகள் மோதியதால் ரயில் தடம்புரண்டு மட்டக்களப்பு – கொழும்புக்கு இடையிலான ரயில் சேவைகள் தடைப்பட்டிருந்தது.
இந்நிலையில் இரவு 8.15 மணிக்கு பயணிக்கவிருக்கும் ரயில் சேவை வழமை போன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று அதிகாலை கடுகதிரயிலில் மோதி 5 காட்டு யானைகள் உயிரிழந்தமை குறிப்பிடதக்கது.
மேலதிக செய்திகளுக்கு 👇👇👇👇👇
மட்டக்களப்பு மார்க்கத்தின் ரயில் சேவைகள் ரத்து