மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று புதன் கிழமை குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு வாழ் குருக்கள்மடம் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் சிவஞானம் சிறீதரன் , குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய அதிபர் சிறிதரன் மற்றும் மட்டக்களப்பு வாழ் குருக்கள்மடம் ஒன்றியத்தின் முக்கிய பிரமுகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
முதல் நிகழ்வாக அதிதிகள் பாடசாலை நுழைவாயிலில் இருந்து மலர் மாலை அணிவித்து , பாண்டு வாத்திய இசையுடன் வரவேற்கப்பட்டு, மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியதுடன்,வரவேற்பு நடனம், தலைமையுரை, அதிதிகள் உரை , கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு எனபல நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது 100 மேற்பட்ட மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் குருக்கள் மடம் கிராம மக்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.