மட்டக்களப்பு – கள்ளியங்காடு இந்து மயானத்தில் ஆண் ஒருவர் மயான கட்டிடத்தின் கூரையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த நபர் கள்ளியங்காடு இந்து மயானத்தில் வேலை செய்பவர் என தெரிவிக்கப்படுகின்றது.
சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்
மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.