மட்டக்களப்பு கல்லடி பால இறக்கத்தில் தனியார் பேருந்து ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பேருந்தே இவ்வாறு மோட்டார்சைக்கிளுடன் மோதியுள்ளது.
இதேவேளை மோட்டார் சைக்கிளில் இரண்டு பெண்கள் பயணித்த நிலையில் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த இடத்தில் ஒன்று கூடிய பொது மக்கள் பேருந்தின் சாரதியை கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவ இடத்திற்கு வருகை தந்த காத்தான்குடி பொலிஸார் சாரதியை கைது செய்து பேருந்தையும் கைப்பற்றி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடியோ 👇👇👇👇👇
https://www.facebook.com/Minnal24newspageofficial/videos/502381085938051

