மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு உரிய திணைக்களத்தினால் வழங்கப்பட்ட எரிபொருள் விநியோக அட்டைக்கு அமைவாக பெற்றோல் விநியோகம் இடம்பெற்று வருகின்றது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக மாவட்ட செயலகத்தின் ஒழுங்குபடுத்தலிற்கு அமைவாக கடந்த ஓரிரு தினங்களிற்குள் சுமார் 1000 இற்கு மேற்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவுத்திட்டத்திற்கு அமைவாக பெற்றோல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது, அரச திணைக்களத்தால் விநியோகிக்கப்பட்டிருந்த எரிபொருள் அட்டைகள் அதிகாரிகளினால் பரிசோதிக்கப்பட்டு, QR பரிசோதனையின் பின்னர் பெற்றோல் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்படத்தக்கது.
இதன் போது, பொதுமக்களுக்கும் QR பரிசோதனையின் பின்னர் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட குடும்ப அட்டை பரிசோதிக்கப்பட்டு வாகன இறுதி இலக்கத்திற்கு அமைவாக பெற்றோல் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது