ஊவா, மத்திய, தென் மாகாணங்களிலும் மட்டக்களப்பு அம்பாறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில மணித்தியாலங்களில் தீவிரமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இப்பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழையை எதிர்பார்க்கலாம் என அத்திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.