-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பெய்து வரும் அடை மழை வெள்ளம் காரணமாக மட்டக்களப்புக்கான ரயில் சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு – கொழும்பு ரெயில்வே வழித் தடத்தில் வெலிக்கந்தைக்கும் புணாணைக்கும் இடைப்பட்ட பகுதியில் வெள்ள நீர் கரை புரண்டு பாய்வதால் புகையிரதம் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.