மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் 9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 83 வயதுடைய முதியவரை நேற்று புதன்கிழமை மாலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள சிறுமி மீது முதியவர் பாலியல் சேட்டை புரிந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி இது தொடர்பில் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
அதன் பின்னர், குறித்த முதியவரை நேற்று மாலை அவரது வீட்டில் வைத்து பொலிஸார் கைது செய்ததுடன், சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.