மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஒல்லிக்குளம் பற்றிமாபுரத்தில் ஆறு மாத குழந்தை விசப்பாம்பு தீண்டி இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்று முப்பது மணி அளவில் உயிரிழந்துள்ளது.
இக்னேஷ் அபிலாஷ் என்னும் 6 மாத ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
தாயின் அருகே தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை இன்று அதிகாலை மூன்று முப்பது மணி அளவில் பாம்பு தீண்டிய நிலையில் தாய் காலை 7 மணி அளவில் மயக்க நிலையில் இருந்த குழந்தையை ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதித்தார் .
குறித்த குழந்தை உயிரிழந்த நிலையிலேயே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனையின் பின்னர் குழந்தை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வீட்டின் அருகில் இருந்த காடுகளுக்குள் இருந்தே பாம்பு வீட்டினுள் நுழைந்து குழந்தையை தீண்டியிருக்கலாம் எனவும் குறித்த பாம்பை அயலவர்கள் அடித்துக் கொன்றுள்ளதுடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .