மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை தூக்கிசென்று பாலியல் வண்புனர்வு செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 5 ஆம் திகதி மாலை குறித்த சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது சகோதரியை பார்க்க சென்று அன்று இரவு வீடு திரும்பாத நிலையில் அடுத்த நாள் காலை வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த சிறுமியிடம் குடும்பத்தினர் இது தொடர்பில் விசாரித்த போது தன்னை மூன்று பேர் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று பாலியல் வண்புனர்வு செய்ததாக தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து குறித்த சிறுமியின் குடும்பத்தினரால் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது
அதன்படி முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சந்தேகத்தின்பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஆரையம்பதி பகுதியைச் சேர்ந்த 26-32 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியின் மருத்துவ பரிசோதனையின் பின்னரே குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவார்கள் என்றும் கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என்றும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.