மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் முதல் கட்டமாக கருவேப்பங்கேணி மற்றும் நாவற்கேணி கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரிசி பொதிகள் மூன்று நாட்களாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் இளைஞர் அணி தலைவரும் பிரபலிய வர்த்தகருமான ச.சுரேஷ்குமாரால் 500 குடும்பங்களுக்கு அரசிப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கிராம அபிவிருத்தி உத்தியோஸ்தர், கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர், கட்சியின் மகளிர் அணி தலைவர், மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
