மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை யுக்தி நடவடிக்கையின் கீழ் போதை பொருளை கடத்துபவர்களை தேடி நகருக்குள் உள் நுழையும் பஸ் வண்டிகள் மற்றும் வாகனங்களை தீவிர சோதனை செய்தனர்.
அதிகாலை 2 மணிக்கு ஆரம்பித்த சோதனை நடவடிக்கையில் சந்தேகத்தில் 3 பேரை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சோதனை நடவடிக்கையின் போது பேருந்துகளில் இருந்து அனைத்து பயணிகளையும் கீழ் இறக்கி அவர்களையும் அவர்களது உடமைகள் அனைத்தையும் தீவிரமாக சோதனையிடும் நடவடிக்கை காலை 6 மணிவரை மேற்கொண்ட நிலையில் சந்தேகத்துக்கு இடமாக பிரயாணித்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் விடுவிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.