மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் படகில் மீன்பிடிக்க சென்ற நபர் காணாமல் போயுள்ளார்.
குறித்த பகுதியில் சீரற்ற வானிலை காரணமாக உன்னிச்சை குளம் திறந்த விடப்பட்டுள்ள நிலையில் படகில் மீன்பிடிக்க சென்றவர் காணமல் போயுள்ளதாகவும் அவரை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் காணாமல் போனவர் தொடர்பிலான மேலதிக விபரங்கள் எதுவும் இது வரையில் கிடைக்க பெறவில்லை.