-அலுவலக செய்தியாளர் சௌமினி சுதந்தராஜ்-
மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாந்தீவு வாவியில் மின் பிடிக்க சென்று காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஈச்சந்தீவு, நாவற்காடு பகுதியைச் சேர்ந்த சுந்தரன் விமலகாந்தன் (வயது – 42) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான மீனவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை படகில் மீன்பிடிக்கச் சென்ற குறித்த நபரே இவ்வாறு நேற்று புதன் கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
