மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பில் இன்று வியாழக்கிழமை சந்தேகத்தற்கிடமான பொதி மீட்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மல்லிகைதீவு காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் பொதி ஒன்றினை அடையாளம் தெரியாத ஒருவர் விட்டுச்சென்றுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது இலக்கம் 50 வகையை கொண்ட துப்பாக்கி ரவைகள் 37 மீட்டெடுக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பொதி தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் மர்ம பொதியினை விட்டுச்சென்ற நபர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கபெறாத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.