மட்டக்களப்பு வேலூர் பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை மாலை 3.30 மணியளவில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கியுள்ளார்.
வேலூர் 7 ஆம் குறுக்கு பகுதியை சேர்ந்த மீன் வியாபாரியான ஜனார்த்தனன் (வயது – 40) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மனைவியுடன் ஏற்பட்ட வாய் தர்க்கத்திலேயே இவர் இவ்வாறு தூக்கில் தொங்கியதாக தெரியவந்துள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.