மட்டக்களப்பு நகரில் இன்று வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் ரயிலில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புன்னை சோலை குமாரத்தன் புரம் பகுதியை சேர்ந்த சரண் (வயது – 22) என்ற ஒரு பெண் பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த பகுதியில் உள்ள தண்டவாளத்தில் உயிரிழந்த நபரும் அவருடைய நண்பர்களும் மது அருந்தி கொண்டு இருந்த வேளையில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி எண்ணெய் ரயில் வந்த நிலையில் நண்பர்கள் குறித்த இடத்திலிருந்து கலைந்துள்ளதுடன் உயிரிழந்தவர் போதையில் நகர முடியாமல் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
இதன்காரணமாக ரயில் சேவைகளில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
சடலம் மரண விசாரணை அதிகாரியின் பரிசோதனைகளின் பின்னர் மட்டு போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.