மட்டக்களப்பில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மக்கள் தங்களது உறவினர்களின் வீடுகளுக்கும் பாதுகாப்பான பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்துள்ளனர்.
மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளில் கால்வாய்கள், ஆறுகள் நிரம்பியுள்ளதுடன் தாழ் நில பிரதேசங்களில் போக்குவரத்தில் ஈடுபடும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலயம் அறிவுறுத்தியுள்ளது.
அந்த அறிக்கையின்படி கிரான் பகுதியில் படகு சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் வெள்ளத்தினால் 20 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை செங்கலடி பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 34 குடும்பங்கள் ஏறாவூர் கோவில் மண்டபத்திலும் 25 குடும்பங்கள் சவுக்கடி தேவாலயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வாகரை பகுதியில் வெள்ளம் காரணமாக கல்லரிப்பு பிரதேச போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு படகு சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் காத்தான்குடி பகுதியில் பாதிக்கப்பட்ட 11 குடும்பங்கள் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.