மட்டக்களப்பில் தோட்டவாடியில் பாம்பு தீண்டியதில் சிறுவன் ஒருவன் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த 12 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
தோட்டவாடியில் உறங்கிக்கொண்டிருந்த சிறுவனை திங்கட்கிழமை பாம்பு தீண்டியாதாகவும் குறித்த சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.