மட்டக்களப்பு மாவட்டத்தில் பின் தங்கிய பாடசாலைகளுக்கு சுற்றுமதில் அமைக்க ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கியுள்ளார்.
அதன் அடிப்படையில் களுவன்கேணி, கரவெட்டி, கறுவாக்கேணி ஆகிய பாடசாலைகளுக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ரணில் 2024 செயலணி தலைவர் கணபதிப்பிள்ளை மோகனின் பரிந்துரைக்கு அமைய வவுனதீவு பற்று கரவெட்டி ஜிரிஎம்எஸ் (GTMS) பாடசாலை, வாழைச்சேனை கறுவாக்கேணி விக்னேஸ்வரா சிறுவர் பாடசாலை, ஏறாவூர் பற்று களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு சுற்றமதில் அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பரிந்துரை செய்துள்ளார்.
இதற்கான அளவீட்டு பணிகள் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.