கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம்- இலங்கை, சிவராம் ஞாபகார்த்த மன்றம் – சுவிஸ் ஆகியன இணைந்து தொகுத்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராம் தொடர்பான கட்டுரைகள் அடங்கிய ‘தராக்கி’ ஈழத் தமிழ் ஊடக முன்னோடி நூலின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 15 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் நடைபெற்றது.
இத் தொகுப்பில் ஊடகத்துறை ஆளுமைகள், நண்பர்கள், உறவுகள் என 41 பேர் எழுதிய கட்டுரைகள் உள்ளடஙகுகின்றன.
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எல். தேவஅதிரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது அரசியல் தலைவர்களும் பேராசிரியர்களும் மற்றும் மூத்த ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.







