நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு காரணமாக அவற்றை கட்டுப்படுத்தும் முகமாக இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு கொக்குவில் பொது சுகாதார பரிசோதகர் பிரிவின் கீழ் உள்ள திராய்மடு தொடக்கம் சின்ன ஊறனி வரையிலான பிரதேசங்களில் மட்டக்களப்பு மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் ஏற்பாட்டில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது மட்டக்களப்ப மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள், மட்டக்களப்பு மாவட்ட பொது சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர் சங்கம், தெளிகருவி இயக்குனர் சங்கம், மற்றும் டெங்கு தடுப்பு உத்தியோகத்தர் சங்கம் என்பன இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

