மட்டக்களப்பு நொச்சிமுனை பகுதியில் பாடுமீன் சனசமூக வாசிகசாலை மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 4 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியத்தினால் இளைஞர் அணிக்குழு கூட்டம் இடம்பெற்றது.
மதங்களுக்கு இடையிலான முறண்பாடுகளை தவிர்க்கும் முகமாக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டும் செயற்பாடுகளில் ஒன்றாக இளைஞர்களை ஒன்றினைத்து ஒரு அமைப்பாக தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர். மனோகரன் தலைமையில் நேற்று உருவாக்கப்பட்டது.
இதன்போது உருவாக்கப்பட்ட குழுவின் தலைவர், செயலாளர், உப தலைவர், பொருலாளர், அமைப்பாளர், உபசெயலாளர், விளையாட்டு செயலாளர், கலாச்சார நிகழ்வு பொறுப்பாளர், ஊடக பொறுப்பாளர் என்போர் இந்து, இஸ்லாம் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளடங்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.
தெரிவுசெய்யப்பட்ட இந்த குழுவின் முதலாவது செயற்பாடாக இனங்களுக்கிடையிலான முறண்பாடுகளை தவிர்க்கும் முகமாக விளையாட்டு போட்டி மற்றும் கலாச்சார போட்டிகள் எதிர்வரும் காலங்களில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இறுதியாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் அறிமுக உரையுடன் இளைஞர் அணி குழுவின் செயலாளரினால் நன்றி உரை நிகழ்த்தப்பட்டு முடிவுற்றது.




