-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மட்டக்களப்பில் காப்புறுதி செய்யப்பட்ட அஞ்சல் வாக்குச்சீட்டுக்கள் மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் எஸ். ஜெகனிடம் கையளிக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரும் மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலருமான ஜஸ்டினா ஜுலேகா தலைமையில் மாவட்ட தேர்தல்கள் உதவி ஆணையாளர் எம்.பி.எம் சுபியான் அடங்கிய தேர்தல்கள் அலுவலர்களால் இவை கையளிக்கப்பட்டன.
இதேவேளை அடுத்த மாதம் 14ஆம் திகதி இடம் பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக தேர்தல் கடமை மேற்கொள்ளவுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுக்களே கையளிக்கப்பட்டுள்ளன.


