மட்டக்களப்பு காத்தான்குடி ஆரையம்பதி சிகரம் பகுதியில் 74,000 மில்லி லீற்றர் கசிப்புடன் இன்று வியாழக்கிழமை பி.ப 12 மணியளவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆரையைம்பதியைச் சேர்ந்த 30 மற்றும் 31 வயதைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்ககளில் ஒருவரிடமிருந்து 70,000 மில்லி லீற்றர் மற்றொருவரிடமிருந்து 4,000 மில்லி லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.