-அலுவலக செய்தியாளர் சௌமினி சுதந்தராஜ்-
மட்டக்களப்பு கூழாவடி பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை மக்கள் குடியிருக்கும் பகுதியில் முதலை நுழைந்துள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக குளங்கள் ஏரிகளில் நீர் நிறம்பி மக்கள் குடியிருப்புக்குள் நுழைவதுடன் அவற்றுடன் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய விச ஜந்துக்களும் மக்கள் குடியிருப்புக்குள் நுளைகின்றது.
இதேவேளை இன்று காலை கூழாவடி பகுதியில் வீடு ஒன்றினுள் முதலை நுழைந்ததையடுத்து அப்பகுதி மக்களால் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து முதலையினை கொண்டு செல்லும் நடவடிக்கையில் அதிகாரிகள் முன்னெடுத்ததாக தெரியவந்துள்ளது.