-மூதூர் நிருபர் –
திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தங்கநகர் பகுதியில் இன்று புதன் கிழமை காலை மீன்கள் ஏற்றிவந்த லொறி பாதையை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த மீன் லொறியே இந்த விபத்தை எதிர்நோக்கியுள்ளது.
இச்சம்பவத்தில் வாகனச்சாரதி தெய்வாதீனமாக உயிர் தரப்பியுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.