கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கிவந்த சமூகப்பிறழ்வான விடுதிகளில் நேற்று புதன் கிழமை இரவு பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது 29 வயது தொடக்கம் 42 வயதுக்குட்பட்ட ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆயுர்வேத ஸ்பா நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழில் செயற்பாடுகள் நடைபெறுவதாக கல்கிஸ்ஸ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி பொலிஸாரின் சுற்றி வளைப்பினை தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கைது செய்யப்பட்டவர்களை இன்றைய தினம் வியாழக்கிழமை கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.