இரத்மலானை பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என கூறி விபசார விடுதி நடத்திய இரு பெண்கள் நேற்று செவ்வாய்க்கிழமை கல்கிஸை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதியத்தலாவ மற்றும் அம்பாறை பிரதேசங்களை சேர்ந்த 27 மற்றும் 32 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.